Posts

Showing posts from November, 2024

இறைவன் அருள் இருந்தால் இந்தப் பதிவை படித்து உள்வாங்க முடியும்! இறையருளால் உண்மைப் பொருள்!

Image
  குறள்  36: அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை சொற்கள் பிரித்து விளக்கம்: அன்றறிவாம்   - சில செயல்களின் பயனை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது நாம் செய்யும் தர்மச் செயல்களுக்கு உடனடியாக அதன் முழு பயனை அறிய முடியாது. என்   - எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல் எதை செய்கிறோமோ அதை   என்பதாகப் பொருள்படும். ஆது   - இரக்கத்துடன், பரிவுடன் இதன் பொருள், தர்மத்தை இரக்கமும் பரிவும் கொண்ட மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்பதாகும். அறம்   - தர்மம் அறம் என்பது பிரதிபலன் பாராது செய்யும் தர்மம். செய்க   - செய்தல் அறத்தின் ( பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இல்லாமல், பார்க்க குறள் 35)  அடிப்படையில் செயல்களைச் செய்தல். மற்றது   - இவ்வாறு யோசிக்காமல் செய்யப்பட்ட தர்மங்கள் (மற்றவை அல்ல) எண்ணிப் பின்பு பயன் பார்த்து செய்யும் தர்மம் அல்லாமல், உண்மையான அர்த்தமுள்ள தர்மச் செயலைக் குறிக்கிறது. பொன்றுங்கால்   - உடலை விட்டு ஆன்மா நீங்கும் பொழுது இறப்பின் தருணத்தில், இந்த உடலை விட்டுப் பிரியும் தருணத்தில். பொன்றாத் துணை ...

திருக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தின் குறள்களுக்கு விளக்கம் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
"நீத்தார் பெருமை" என்கின்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் முழுமையாக ஐம்புலன்களை கட்டுப்படுத்தி நெறியுடன் வாழ்பவர்களின் பெருமையை விளக்குகிறார். இவ்வாறு ஐம்புலன்களை அடக்கி ஒழுக்க நெறியில் நிலைத்திருப்பவர்கள், இல்லற வாழ்வில் இருந்தாலும், துறவறம் மேற்கொண்ட முனிவர்கள் அடையும் வீடுபேற்றினை அடைய முடியும் என்று திருவள்ளுவர் உறுதியாகக் கூறுகிறார். குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு சொற்கள் பிரித்து விளக்கம்: ஒழுக்கம்   - ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறியில் வாழ்பவர் ஐம்புலன்களை அடக்கி, ஒழுக்க நெறியில் வாழ்பவர்களை குறிக்கிறது. ஒழுக்கம் என்றால் ஒருவரின் ஆளுமையை ஆளும் நற்குணங்களைக் கொண்ட வாழ்வு. அத்து நீத்தார்   - துறவிகள், பிரம்ம ஞானம் பெற்றவர்கள் (அத்துவர்) துறவு வாழ்க்கையைப் பின்பற்றிவிட்டு, பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள். பெருமை   - புகழ் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் இந்த துறவிகள் பெற்றுள்ள உயர்ந்த புகழ் அல்லது நற்பெயர். விழுப்பம்   - குலம் ஒருவர் பிறந்த குலம் அல்லது சமூகத்தை குறிப்பது. வேண்டும்   - கண்டிப்பாக "வேண்டும்" என்பதன் ...