*அற்புதமான இறைய அனுபவப் பதிவு* கந்தர் அலங்காரப் பாடல்!
அற்புதமான இறைய அனுபவப் பதிவு சிவாய நம, இன்றைய தினம் 2 மணி நேரத்திற்கு முன்பு வாக்கிங் செல்லும் பொழுது ஒரு இடத்தில் நிறைய கற்கள் இருக்கும். அதனை லிங்கமாக உருவகப்படுத்தி ஒவ்வொரு முறை வாக்கிங் செல்லும் பொழுதும் மானசீகமாக வணங்குவதுண்டு. இன்று அவ்வாறு செய்கையில் கண்டபடி அலையும் மனதை அழிக்க மாட்டாயா இறைவா? என்ற எண்ணம் தோன்றியது. அதே நேரத்தில் மனத்தை அழிக்க முடியுமா? மனம் அழிந்தால் வாழ முடியுமா? என்ன பைத்தியக்காரத்தனமான பிரார்த்தனை என்று தோன்றியது. அதற்குப்பின் முடிந்த மட்டும் இறை நாமத்தைச் சொல்லி நடை பயணத்தை முடித்து வீட்டிற்கு வந்த பொழுது youtube நோட்டிபிகேஷன் ஒன்று வந்திருக்க அதை ஓபன் செய்த பொழுது, அந்த வீடியோவிற்கு கீழே இருந்த டைட்டில், "ஆன்மாவை அலங்கரிக்க அருணகிரிநாதர் அருளிய" என்று பார்த்த பொழுது உள் மனதில் ஏதோ ஒன்று அந்த வீடியோவை பார்க்க தூண்டியது. கந்தர் அலங்காரத்தில் சொல்லப்பட்ட ஒரு பாடலின் விளக்கம் அது: அந்த பாடல் வரிகள்: சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன...