Posts

Showing posts from October, 2024

திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் போற்றிகள் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
ஒளியாகி அண்டமெல்லாம் நிறைந்திருப்பவன் திருவடி வணங்குவோம்! எங்கும் நிறைந்திருப்பவன் சிவாய நம   இறைவனின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றித் துதிக்கும் பொழுது நம் அகத்தில் இருக்கும் இறைவன் உளம் மகிழ்கிறான். திருவள்ளுவர்   கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்   இறைவனைப் போற்றி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஒளியாகி எங்கும் நிறைந்திருப்பவனைப் போற்றுவோம். ஆதி பகவன் தாள் போற்றி   - முதன்மையானவன் திருவடிகள் போற்றி வாலறிவன் நற்றாள் போற்றி   - பரிசுத்தமானவன் திருவடிகள் போற்றி மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி   - எங்கும் நிறைந்திருந்தாலும் தாமரை மலர் போல் உயர்ந்து தனித்திருப்பவன் தாள் போற்றி வேண்டுதல்வேண் டாமை இலானடி   - விருப்பு வெறுப்பு அற்றவன் திருவடி போற்றி இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் மாட்டு (திருவடி) போற்றி   - பிறப்பு இறப்பு நன்மை தீமை இல்லாதவன் திருவடி போற்றி ஐந்தவித்தான் தாள் போற்றி   - நம் ஐம்புலன்களின் அர்ப்பணிப்பை ஏற்று மாயையில் இருந்து விடுவிப்பவன் தாள் போற்றி தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி   - இறைவனுக்கு சமமான, ஒப்புமையாக, இணையாக இல்லாதவன் ...

திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் 10 குறள்கள் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
  குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு சொற்கள் பிரித்து விளக்கம்: அகரம்   - "அ" என்னும் எழுத்து தமிழ் மொழியின் முதல் எழுத்து, எழுத்துக்களின் தொடக்கம். முதல   - முதல் துவக்கம், ஆரம்பம் என்று பொருள். எழுத்தெல்லாம்   - தமிழ் எழுத்துக்கள் அனைத்திற்கும் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் குறிக்கிறது. ஆதி   - முதல் அடிப்படையானது, அடுத்தவர்களுக்கு அடித்தளம். பகவன்   - இறைவன், குரு உலகத்திற்கு முதன்மையானவர், அறிவு மற்றும் பிரபஞ்சத்தின் அடிப்படை. முதற்றே   - முதல் + ஏ “முதல்” என்பது துவக்கமானதையே குறிக்கிறது; "ஏ" சேர்த்துச் சொல்வதால், இறைவனின் உயர்ந்த நிலையைப் பிரதிபலிக்கிறது. உலகு   - உலகம் புவியில் உள்ள அனைத்தும், உயிர்களும் பொருட்களும் அடங்கும். முழு விளக்கம்: திருக்குறள் 1 ல்,   திருவள்ளுவர்   தமிழ் மொழியின் தொடக்கமான   "அகரம்"   என்பதையும், உலகத்தின் தொடக்கமான   இறைவனையும்   ஒப்பிட்டு வர்ணிக்கிறார். அகரம் தமிழில் எழுத்துக்களின் தொடக்கம், அதன் அடித்தளம் எனின், இறைவனே உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும் தொடக்கம்...

ஒருவரும் தேறிலர்; ஆனால் அச்சில் வார்ப்போம்!ஆகாவிட்டால் மிடாவில் வார்ப்போம்! - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
   சிவாய நம, மேலே இருக்கும்  படத்தில் இருக்கும் வார்த்தைகள்  வள்ளலார் பெருமான்   அவர்கள் ஜோதியாக மறைவதற்கு முன்பு   "ஒருவரும் தேறிலர்;  ஆனால் அச்சில் வார்ப்போம்   ஆகாவிட்டால் மிடாவில் வார்ப்போம்"    என்று சொல்லிவிட்டு சென்றார்.   இதனுடைய உண்மை பொருளை  இப்பொழுது பார்ப்போம்.    விடுகதை போல் இருக்கும் இந்த வரியை   இன்னும் கொஞ்சம் புரியும் படி   இங்கு கொடுக்கப்படுகிறது.  "ஒருவரும் தேறிலர்;  தேறினால் அச்சில் வார்ப்போம்; தேறாவிட்டால் மிடாவில் வார்ப்போம்"    வள்ளலார் சொன்ன "ஆனால்"  என்பது  "தேறினால்"   என்று பொருள்.   "ஆகாவிட்டால்"   என்பது "தேறாவிட்டால்" என்று பொருள்.  அச்சு   என்றால்  மூலப்பொருள் என்று   அர்த்தம்.   இங்கு மூலப்பொருள் இறைவனை குறிக்கிறது. மிடா   என்றால்  பானை செய்வதை குறிக்கிறது.   பானை செய்த பின்பு நெருப்பில் புடம் போடப்படும்.   ஆக...

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் பாடல் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. சொற்பொருள் : சாற்றுங்கால்   – அறிவித்தல் நீதி   – உண்மை வழி (இறைவன் நெறிப்படி, அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன்) மேதி   – உலகம் இட்டார்   – தானம் செய்பவர்கள் இடாதார்   – தானம் செய்யாதவர்கள் பட்டாங்கு   – இரு பொருள் உள்ளது; ஒன்று உண்மை, மற்றொன்று விளையாட்டாக, கேலியாக சொல்வது. விளக்கம் : இந்தப் பாடலில்,   அவ்வையார்   மனிதர்களை சாதி, மதம், மொழி, மற்றும் இனம் எனப் பிரிப்பது எவ்வளவு தவறானது என்பதை எடுத்துரைக்கிறார்.   நீதி வழுவா நெறிமுறை   என்பது, இறைவன் நெறியைப் பின்பற்றும் ஒரு உண்மை வழி. அதாவது,   ஒரே குலம், ஒரே இறைவன்   என்ற திருமூலரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவ்வையார் சொல்வது உலகில் உள்ள மனிதர்களில் சாதி, மதம், மொழி போன்ற  அடையாளங்களால் பிரித்தல் கூடாது என்பதாகும்.  அவ்வையார்  மேலும்,   "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்"   எனக் கூறி, தானம் செய்பவர்களை ...

மலர்மிசை ஏகினான் (குறள் 3) - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

Image
   விளக்கம் எழுதிய   அடுத்த நாள் காலை  இறைவனால்  காண்பிக்கப்பட்ட படம்! மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் மலர்   - தாமரை மிசை   - உயர்வு, முன்னிடம் ஏகி   - தனித்து இருப்பவன் மாணடி   - பரிசுத்தமான நீடு   - நிலைத்து இங்கு   மலர்   என்பது தாமரை மலரை குறிக்கிறது. ஏன் என்றால், தாமரை மலர் மட்டும்தான் சேற்றிலே விதை போட்டு இருந்தாலும், தண்ணீருக்குள் பல அடி அதனுடைய தண்டு வளர்ந்து, சேற்றிலும் சரி, தண்ணீரிலும் சரி, ஒட்டாமல் உயர்ந்து நிற்கிறது.   மிசை   என்றால் உயர்ந்து என்கின்ற அர்த்தத்தை குறிக்கிறது. ஏகினான்   என்றால் தனித்து இருப்பவன் என்று பொருள். தாமரை விதைகள் சேற்றிலே விதைக்கப்பட்டு, அழுக்கான தண்ணீரிலும் வளர்ந்தாலும், சேற்றிலும் தண்ணீரிலும் அது ஒட்டாமல் தனியாக உயர்ந்து நிற்பது போல், இறைவன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிர்களிலும் பொருட்களிலும் இருக்கிறான். சேறு, அழுக்கான தண்ணீர் போன்றவை மும்மலங்கள் நிறைந்த உயிர்களைக் குறிக்கின்றன. அப்படிப்பட்ட உயிர்களின் உள்ளே இறைவன் இருந்தாலும் கூட, அவ...

குருவே இறைவன்! இறைவனே குரு! – குருவின் பெருங்கருணை!

Image
  சிவாய நம ,  சீரடி சாய்  உருவில்  குருவாக வந்து  அன்பைப் பொழிந்து கொண்டிருக்கும்   குருவின் திருவடிகளுக்கு  இந்த ஆன்மாவின்  பரிபூரண  சரணாகதி!   குருவாய் வந்து அன்பைக் கொடுத்த   பிரபஞ்ச அன்பனுக்கு  இந்த ஆன்மாவின்  பரிபூரண அன்பும், நன்றியும்,  நம்பிக்கையும்!     என்றும் அன்புடனும் நன்றியுடன் -   உங்களின் அன்பை உணர்ந்த  ஓர் ஆன்மா   இன்றைய தினம் விஜயதசமி  நன்னாளில்  2024 ஆம் ஆண்டு   குருவின் திருவருளால்  உண்மைப் பொருள் அறிவோம்  என்கின்ற  இந்த இணையதளம்   உருவாக்கப்பட்டு  நம்முடைய தமிழில்  உள்ள  பொக்கிஷங்களான  திருவாசகம் திருவருட்பா    இதுபோன்ற எந்த பாடல்களை இறைவன் காண்பித்தாலும்  அந்த பாடல்களுக்கு  இறைவன் அருளால்  தமிழ் அகராதி உதவியுடன்    இறைவன் உணர்த்தும்  உண்மை பொருளுடன்  இங்கு பகிரப்படும்!    உண்மைப் பொருள் என்று சொல்லும் பொழுது   இரண்ட...