Posts

Showing posts from August, 2025

சாய் அருளால் அபிராமி அந்தாதி விளக்கம்!

 தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே பொருள் விளக்கம் தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே → கொன்றை மலரும், சண்பக மலரும் சூடி பார்வதியை தன் பாதியாக கொண்டிருக்கும் சிவசக்தியின் மகனான கணபதியே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே → ஏழு உலகத்தையும் உருவாக்கிய பெருமை உடைய அபிராமியின் அந்தாதி (தலை முதல் பாதம் வரை - முதலும் முடிவும்). → அபிராமி அந்தாதி அதாவது அன்னையின் தலை முதல் பாதம் வரை - உலகத்தின் முதலும் முடிவுமான அன்னை,  எப்பொழுதும் என் சிந்தையில் இருக்கும் அன்னை அபிராமியைப் பற்றிப் பாட கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே →  கருமை நிற உடல் உடைய கணபதியை வணங்குகிறார் அபிராமி பட்டர். சிறப்பு குறிப்பு இந்த அபிராமி அந்தாதி பாடல் முதல் பாடல் முடிவு பெற்ற வார்த்தையிலிருந்து இரண்டாவது பாடல் தொடங்குகின்றது. முதலும் முடிவும் அபிராமி என்பதனை உணர்த்தும் அ...