திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் 10 குறள்கள் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!




 

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. அகரம் - "அ" என்னும் எழுத்து

    • தமிழ் மொழியின் முதல் எழுத்து, எழுத்துக்களின் தொடக்கம்.
  2. முதல - முதல்

    • துவக்கம், ஆரம்பம் என்று பொருள்.
  3. எழுத்தெல்லாம் - தமிழ் எழுத்துக்கள் அனைத்திற்கும்

    • தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் குறிக்கிறது.
  4. ஆதி - முதல்

    • அடிப்படையானது, அடுத்தவர்களுக்கு அடித்தளம்.
  5. பகவன் - இறைவன், குரு

    • உலகத்திற்கு முதன்மையானவர், அறிவு மற்றும் பிரபஞ்சத்தின் அடிப்படை.
  6. முதற்றே - முதல் + ஏ

    • “முதல்” என்பது துவக்கமானதையே குறிக்கிறது; "ஏ" சேர்த்துச் சொல்வதால், இறைவனின் உயர்ந்த நிலையைப் பிரதிபலிக்கிறது.
  7. உலகு - உலகம்

    • புவியில் உள்ள அனைத்தும், உயிர்களும் பொருட்களும் அடங்கும்.

முழு விளக்கம்:

திருக்குறள் 1ல், திருவள்ளுவர் தமிழ் மொழியின் தொடக்கமான "அகரம்" என்பதையும், உலகத்தின் தொடக்கமான இறைவனையும் ஒப்பிட்டு வர்ணிக்கிறார். அகரம் தமிழில் எழுத்துக்களின் தொடக்கம், அதன் அடித்தளம் எனின், இறைவனே உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும் தொடக்கம், அடித்தளம் எனக் கூறுகிறார்.

அகரம் எழுத்துக்களின் தொடக்கம் போல், இறைவனும் உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் துவக்கமாக விளங்குகிறார். திருவள்ளுவர் இவ்வகையில் அனைத்து எழுத்துக்களுக்கும் முதன்மையானது “அகரம்” என்பதையும், உலகின் ஆரம்பம், ஆதாரம் இறைவனே என்பதை அறுதியிட்டு கூறுகிறார்.

எளிய பொருள்:

தமிழின் அனைத்து எழுத்துக்களுக்கும் "அகரம்" எவ்வாறு முதன்மையானதோ, உலகில் உள்ள அனைத்திற்கும், உயிர்களுக்கும் இறைவனே முதன்மையானவர்.



குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்"

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. கற்றதனால் - படித்து தெரிந்து கொள்ளல்

    •  படிப்பின் மூலம் பயன் அடைதல்.
  2. ஆய - அனைத்தும்

    • கற்றலின் முழுமை, பரிபூரணம் அடைதல்.
  3. பயனென்கொல் - பயன் என்ன?

    • அதிலிருந்து பெறக்கூடிய பயன் என்ன?
  4. வாலறிவன் - மாசு அற்றவன், பரிசுத்தமானவன்

    • மிகச் சுத்தமான, புனிதமான இறைவன்.
  5. நற்றாள் - புனிதமான திருவடிகள்

    • இறைவனின் உன்னதமான, பரிசுத்தமான திருவடிகள்.
  6. தொழாஅர் - தொழ மறந்தவர்கள், மறுப்பவர்கள்

    • இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள்.
  7. எனின் - என்று சொல்லும் பொழுது

    • அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது

முழு விளக்கம்:

திருக்குறள் 2ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், அகிலத்தில் உள்ள அனைத்தையும் கற்று தேர்ந்து இருந்தாலும்  பரிசுத்தமான இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள் என்றால், அவர்கள் கற்று அறிந்து இருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதாகும்.

அறிவை கற்கும் காரணமே சுத்தமான, உயர்ந்த எண்ணங்களுக்காக; அதுவே இறைவனின் அருளையும் அடைய உதவக்கூடியது. ஆனால், அப்படிக் கற்றும் புனிதமான இறைவனின் திருவடிகளை வணங்காவிட்டால், படித்ததற்கான பயனை அவர்கள் அடையவில்ல்லை என திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

எளிய பொருள்:

பரிசுத்தமான இறைவனின் திருவடிகளை வணங்காவிட்டால், எவ்வளவு கற்று இருந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.



குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. மலர் - தாமரை

    • நீரினுள் விளங்கும் தாமரைப்பூ.
  2. மிசை - உயர்ந்து

    • மேல் அல்லது மேலே உயர்ந்து  இருத்தல்.
  3. ஏகினான் - தனித்து

    • ஒட்டாதவனாக, தனியாகவும் பரிசுத்தமாகவும் இருப்பவர்.
  4. மாணடி - புனிதமான திருவடி

    • உயர்ந்தவனான இறைவனின் பரிசுத்த திருவடிகள்.
  5. சேர்ந்தார் - ஒன்றி இருத்தல்

    • இணைந்து, அதனை மனதில் உறுதியாகக் கொண்டு வாழ்தல்.
  6. நிலமிசை - நிலத்தின் மேல்

    • பூமியில் வாழும் வாழ்க்கை.
  7. நீடு வாழ்வர் - நிலைத்துவாழ்வர்

    • நிலைத்தவனாக நீண்டகாலம் வாழ்பவர்.

முழு விளக்கம்:

திருக்குறள் 3ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், தாமரைச் செடி சேற்றிலும் அழுக்கான நீரிலும் வளர்ந்தாலும், அதனுடன் ஒட்டாமல் உயர்ந்து விளங்கும் தாமரைப்பூவைப் போல, இறைவனும் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திலும் இருந்தாலும் அதன் மும்மலங்களோடு ஒட்டாமல் உயர்ந்த நிலையில் இருப்பவர்.

அந்த உயர்ந்த இறைவனின் திருவடிகளை மனதில் ஒன்றி நினைத்து வாழ்பவர்கள், பூமியில் நிலைத்து வாழும் உயர்ந்த நிலையை அடைவார்கள்.

எளிய பொருள்:

தாமரை மலர்  சேற்றில் வளர்ந்தாலும் தனித்து உயர்ந்து நிற்பது போல்   தனித்து உயர்ந்து நிற்கும் இறைவனின் திருவடிகளை  மனதில் நினைத்து அந்த திருவடியுடன் ஒன்றி   பூமியில் வாழ்பவர்கள்  என்றும் நிலைத்து நிற்கும் பெருமை பெறுவார்.



குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. வேண்டுதல் - விருப்பம் கொண்டிருத்தல்

    • ஆசை அல்லது விருப்பம் கொள்வது.
  2. வேண்டாமை - வெறுப்பு அல்லது விருப்பமின்மை

    • அதிருப்தி அல்லது வெறுப்புடன் இருப்பது.
  3. இலான் - இல்லாதவன்

    • விருப்பமும் வெறுப்பும் இல்லாதவர்.
  4. அடி - திருவடி

    • உயர்ந்தவனின் பரிசுத்த திருவடிகள், இறைவனின் கருணைச் சின்னம்.
  5. சேர்ந்தார்க்கு - சேர்ந்து வாழ்பவர்களுக்கு

    • அந்த திருவடிகளை மனதுடன் இணைத்து வாழ்பவர்கள்.
  6. யாண்டும் - எப்பொழுதும்

    • அனைத்து காலங்களிலும்.
  7. இடும்பை - துன்பம்

    • கஷ்டம், கவலை அல்லது பிரச்சனை.
  8. இல - இல்லை

    • துன்பங்கள் இல்லை, இன்மை.

முழு விளக்கம்:

திருக்குறள் 4ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், ஆசையும் வெறுப்பும் இல்லாமல், அதாவது விருப்பம் மற்றும் வெறுப்பு இல்லாதவன் ஆகிய  நிலைத்த தனி நிலையை உடைய இறைவன் திருவடிகளை நினைத்து ஒன்றியிருப்பவர்களுக்கு எப்போதும் எந்தவிதமான துன்பமும் இல்லை.

இறைவன் ஒருவரின் மனதுக்கு எல்லா நிம்மதியும், அமைதியையும் தரக்கூடியவனாக இருப்பதினால், ஆசை, வெறுப்பு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு, இறைவன் திருவடிகளை மனதால் சேர்ந்தவர்களின் வாழ்வு எப்பொழுதும் துன்பமின்றி நிறைவடைகிறது.

எளிய பொருள்:

ஆசையும் வெறுப்பும் இல்லாத இறைவன் திருவடிகளை மனதில் நினைத்து வாழ்பவர்களுக்கு, எப்போதும் எந்தவிதமான துன்பமும் இல்லை.


குறள் 5:

குறள் 5:

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. இருள்சேர் - துன்பம் அளிக்கும், பிறப்பு மற்றும் இறப்பால் வரும் துன்பம்

    • அறியாமையால் ஏற்படும் பிறப்பு, இறப்பு ஆகியவை துன்பத்தை உருவாக்கும்.
  2. இருவினை - நன்மை தீமை எனும் இரு வினைகள்

    • வாழ்க்கையில் செய்யப்படும் நன்மை, தீமை போன்ற செயல்கள், சுக துன்பங்களை உருவாக்கும் கர்ம வினைகள்.
  3. சேரா - சேராது

    • பிறப்பு, இறப்பு மற்றும் இருவினைகளால் பாதிக்கப்படாதவர்.
  4. இறைவன் - பரமப் பொருள்

    • எல்லா உயிர்களிலும் கலந்த, பிறப்பு, இறப்பு, நன்மை, தீமை ஆகியவற்றைத் தாண்டியவன்.
  5. பொருள்சேர் - அறம், பொருள், இன்பம், வீடுபேறு

    • உயர்ந்த வாழ்க்கைப் பயன்களை (பொக்கிஷத்தை) அடைதல், அதாவது அறத்தின் அடிப்படையில் உயர்ந்த நிலையை அடைதல்.
  6. புகழ்புரிந்தார் - இறைவனை மனதில் நிறுத்தி வெற்றி பெற்றவர்

    • இறைவனின் திருவடியை நினைத்து, அவனருளால் நிலைத்த புகழுடன் வாழ்பவர்கள்.
  7. மாட்டு - இறைவன் திருவடி

    • இறைவனின் புனிதமான திருவடி.

முழு விளக்கம்:

திருக்குறள் 5ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், துன்பத்தை கொடுக்கும் பிறப்பு, இறப்பு, நன்மை தீமை போன்ற இருவினைகளில் ஈடுபடாத, அதற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த இறைவன் திருவடிகளை மனதில் நிறுத்தி வாழ்பவர்கள், பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள்.

பிறப்பு, இறப்பு, நன்மை, தீமை போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை மீறி வாழும் உயர்ந்த நிலையை அவன் திருவடியை மனதில் கொண்டவர்கள் அடைகின்றனர். இவர்கள் இறைவனைப் பற்றிக் கொண்டதால்  உயர்ந்த நிலையை அடைந்து, அந்த நிலையிலே நிலைத்திருப்பர்.

எளிய பொருள்:

இறைவன் திருவடிகளை மனதில் நிறுத்தி வாழ்பவர்கள், பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, அவருடைய அருளால் வீடுபேறு அடைந்து வாழ்வார்கள்.






குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. பொறிவாயில் - ஐம்புலன்

    • ஐம்புலன்கள், நாக்கு, கண், காது, மூக்கு, மற்றும் தோல் மூலம் உணரப்படும் புலன்கள்.
  2.  - கடவுள்

    • இறைவன், பரம்பொருள்.
  3. அவி - அர்ப்பணித்தல், வேள்வி தீயில் கொடுக்கப்படும் ஆகுதி

    • முழுமையாக ஒப்படைத்து, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் செயல்.
  4. பொய் - மாயை

    • உலக மாயை, பொய்மையாகக் காணப்படும் அனைத்தும்.
  5. தீர் - நீங்குகை

    • மாயையிலிருந்து விடுபடுதல்.
  6. ஒழுக்கம் - உயர்வு

    • ஒழுக்கத்தினை நிலைநிறுத்தல், நெறியுடனான வாழ்வு.
  7. நெறி - வீடுபேறு

    • அறநெறியுடன் வாழ்ந்து, வீடுபேறாகிய நிலைமையை அடைதல்.
  8. நீடு - நிலைத்து

    • நிலைத்த நிலை, தொடர்ந்த வாழ்வு.

முழு விளக்கம்:

திருக்குறள் 6ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், எந்தச் செயலை செய்தாலும்   இறைவனை நினைத்து செய்யும்பொழுது  ஐம்புலன்கள் வழியாக செய்யப்படும் அந்த செயல்கள்  இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விடுகிறது.   இவ்வாறு புலன் விஷயங்களை  இறைவனுக்கு அர்ப்பணித்து செய்யும்பொழுது   அவற்றை கட்டுப்படுத்தி  வாழும் தன்மையை நமக்கு கொடுத்து நம்மை உலக மாயையிலிருந்து விடுபடச் செய்கிறான்.

புலன்களின்  வழியாகச் செய்ய்யும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து செய்பவர்கள், உயர்ந்த தர்மநெறியில் நிலைத்து வாழும் நிலை அடைவார்கள். அவர்களின் மாயையை நீக்கப்பட்டு வீடுபேறு நிலையை அடைந்து நிலைத்த வாழ்வை எய்துவர்.

எளிய பொருள்:

ஐம்புலன்களை இறைவனுக்குச் சாமர்ப்பணம் செய்து வாழ்பவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு, வீடுபேறு எனும் உயர்ந்த நிலையை அடைந்து வாழ்வார்கள்.





குறள் 7:


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. தனக்கு - தன்

    • இறைவனது தனித்தன்மை.
  2. உவமை - ஒப்புமை

    • ஒப்பிடத்தக்க.
  3. இல்லாதவன் - ஒப்புமை அற்றவன்

    • இறைவனுக்கு சமமான எவரும் இல்லாதவர்.
  4. தாள் - திருவடி

    • இறைவனின் புனிதமான திருவடிகள்.
  5. சேர்ந்தார் - ஒன்று சேர்ந்தவர்

    • இறைவனின் திருவடிகளோடு மனதை ஒன்றியவர்.
  6. அல்லால் - தவிர

    • அவர்களைத் தவிர.
  7. மனக்கவலை - மனஅமைதி இல்லாமை

    • மனதில் தோன்றும் கலக்கம், கவலை, சங்கடம்.
  8. மாற்றல் - நீக்குதல்

    • அந்த கவலைகளை ஒதுக்குதல், மன அமைதியை அடைதல்.
  9. அரிது - கடினம்

    • எளிதல்ல, மிகவும் கடினம்.

முழு விளக்கம்:

திருக்குறள் 7ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், இறைவனுக்கு ஒப்புமை சொல்லக் கூடியது என்று எதுவும்  இல்லை! அவன் ஒப்பற்றவன்! அந்த உயர்ந்த, ஒப்பற்ற இறைவனின் திருவடிகளை நினைத்து, அவனின் திருவடியில் மனதை ஒன்றியிருப்பவர்களுக்கு மட்டுமே நிம்மதியான, ஆனந்தமான மனநிலையை அடைய முடியும்.

இறைவனின் திருவடிகளில் மனதை வைத்து இருப்பவர்கள்  மனஅமைதியுடன் வாழ்கிறார்கள்;   இதன் மூலம், இறைவனின் திருவடியைத் துதிப்பதன் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் மனஅமைதியையும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

எளிய பொருள்:

இறைவனுக்கு இணையானவர் எவரும் இல்லாததால், அவனின் திருவடிகளை நினைத்து வாழ்பவர்களுக்கு மட்டுமே மனஅமைதி கிடைக்கும்; மற்றவர்களுக்கு மனக்கவலை நீங்கி ஆனந்தம் அடைவது மிகக் கடினம்.



குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. அறவாழி - அருட்கடல்

    • இறைவனின் கருணைக்கடல்; அறத்தின் பெரிய கடல், அதாவது பெரும் அருள் கொண்ட நிலை.
  2. அந்தணன் - வேதியன்; வேதி என்றால் தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு மாற்றுபவர்;

    • வேதியன் வேதி என்றால் ரசாயன மாற்றம், அதாவது தாழ்ந்தவற்றை உயர்ந்தவர்களாக மாற்றுதல். அதாவது பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பாற்றி பிறவா பெருநிலையை அதாவது  உயர்ந்த நிலையை கொடுத்தல்
  3. தாள் - திருவடி

    • இறைவனின் புனிதமான திருவடிகள்.
  4. சேர்ந்தார் - ஒன்று சேர்ந்தவர்

    • இறைவனின் திருவடிகளை மனதுடன் சேர்ந்து வாழ்பவர்கள்.
  5. அல்லால் - தவிர

    • அவர்களைத் தவிர, மற்றவர்கள்.
  6. பிறவாழி - பிற உயிர்கள்

    • மற்ற உயிர்கள்
  7. நீந்தல் - கடந்து செல்லல்

    • அதைக் கடந்து விடுதல் அல்லது விடுபடுதல்.
  8. அரிது - கடினம்

    • மிக எளிதல்ல, பெரும் முயற்சி தேவையானது.

முழு விளக்கம்:

திருக்குறள் 8ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், கருணைக்கடலான இறைவனின் திருவடிகளை நினைத்து மனதில் உறுதியுடன் சேர்ந்து வாழ்பவர்களுக்கே பிறவிக் கடலைத் தாண்டி விடுவது சாத்தியம்.

இறைவன் பிறவிச் சுழற்சியில் சிக்கி தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை உயர்ந்த நிலைக்கு மாற்றும் அந்தணன் (வேதியன்) போன்றவராக இருப்பதைக் குறிக்கிறார். பிறவிப் பெருங்கடலில் நாம் மூழ்காமல்  அதனை கடந்து  விடுபட  இறைவனின் திருவடிகளை மனதில் ஒன்று சேர்த்திருப்பதே வழியாகும்.

அறவாழி என்றால், இறைவன் கருணைக்  கடல்; அதனால்  மனத்னுள் அவரின் திருவடிகளை  நினைத்து ஒன்றி  இந்த பூமியில் தன்னுடைய கடமைகளை செய்பவர்களுக்கு   பிறவி என்னும் தாழ்ந்த நிலையில் இருந்து  பிறவா நிலை என்ற உயர்ந்த நிலை அளிக்கிறார்

எளிய பொருள்:

இறைவனின் திருவடிகளை நினைத்து வாழ்பவர்களைத் தவிர மற்றவர்கள் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது.




குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. கோளில் - தொல்லை, துன்பம்

    • மனதிற்கும் உடலுக்கும் ஏற்படும் துன்பம் அல்லது கஷ்டம்.
  2. பொறியில் - ஐம்புலன்கள்

    • காட்சி, கேள்வி, நுகர்வு, சுவை, மற்றும் தொட்டு உணர்தல் ஆகிய ஐம்புலன்கள்.
  3. குணமிலவே - நல்ல குணங்கள் இல்லாதவை, கட்டுப்படுத்த முடியாதவை

    • அடக்கமற்ற மற்றும் தீய வழியில் செல்லும் புலன்கள்.
  4. எண்குணத்தான் - இரு வினைகளையும் அழித்து பரிசுத்தமாக்குபவன்

    • பாவ, புண்ணியங்களை அழித்து பிறவா பெரு நிலை வழங்குபவன். "எண்" என்பதற்கு அழிப்பு என்ற பொருளும் உள்ளது
  5. தாள் - திருவடி

    • உயர்ந்த இறைவனின் புனித திருவடிகள்.
  6. வணங்காத் - வணங்காதவர்கள்

    • இறைவனின் திருவடிகளை நினைத்து அன்பு செலுத்தாதவர்கள்.
  7. தலை - தலைக்கனம், அகந்தை

    •  நான் என்கின்ற அகத்தைக் கொண்டு  இறைவனை  வணங்காதவர்கள்

முழு விளக்கம்:

திருக்குறள் 9ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், இரு வினைகள் (நன்மை, தீமை) ஆகியவற்றையும் அழித்து, ஒருவரை உயர்த்தி பிறவா பெருநிலை அளிக்கும் இறைவனுடைய திருவடிகளை வணங்காதவர்களுக்கு, தமக்குள் உள்ள தீய எண்ணங்களை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் கிடைக்காது, ஏனெனில் அவர்களுடைய அகந்தை தடுக்கிறது.

புலன்களின் பிடியிலிருந்து விடுபடாவிட்டால்,  பொறாமை, ஆத்திரம் போன்ற தீய எண்ணங்கள் சுலபமாக நம் மனத்தில் உண்டாகும், இது நம்மை ஆழ்ந்த துன்பத்திற்குள் இழுக்கக் கூடியது. இது நம் மனதையும் உடலையும் தாழ்வடையச் செய்யும். இறைவன் திருவடிகளை நினைத்தால் மட்டுமே இந்தத் தீய புலன்களை அடக்கி, மன அமைதி மற்றும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைய முடியும். 

எளிய பொருள்:

இறைவனின் திருவடிகளை வணங்காதவர்களுக்கு, தமக்குள் உள்ள தீய எண்ணங்களையும் புலன்களையும் அடக்க முடியாது; இதனால் அவர்கள் துன்பத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.    புலன்களின் பிடிக்கும் சிக்கிக் கொண்டு  அதில் உழன்று  தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.



குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

சொற்கள் பிரித்து விளக்கம்:

  1. பிறவிப் பெருங்கடல் - பிறவி என்னும் மிகப் பெரிய கடல்

    • பிறவிச் சுழற்சி, மீண்டும் மீண்டும் உயிர்கள் பிறப்பதைக் குறிக்கும், மாயை கடல்.
  2. நீந்துவர் - நீந்தி கடந்து செல்லுவார்

    • கடந்து போகும் திறன் பெற்றவர்.
  3. நீந்தார் - கடக்க இயலாதவர்

    • கடவ முடியாதவர்களாக மாயையில் சிக்கிவிடுபவர்கள்.
  4. இறைவன் - பரம பொருள்

    • எல்லாவற்றிற்கும் காரணமான உயர்ந்த கடவுள்.
  5. அடி - திருவடி

    • இறைவனின் பரிசுத்த அடிகள், இறைவனின் அருள் அல்லது வழிகாட்டுதல்.
  6. சேராதார் - இறைவனைச் சேர்ந்திராதவர்

    • இறைவனை நினைத்து வாழாதவர்கள், அவன் அருளை உணராதவர்கள்.

முழு விளக்கம்:

திருக்குறள் 10ல், திருவள்ளுவர் கூறுவது என்னவென்றால், இறைவன் திருவடிகளை நினைத்து வாழ்பவர்களுக்கு மட்டுமே பிறவியின் பெருங்கடலை (பிறவிச் சுழற்சியைக்) கடந்து விடுவது சாத்தியம்.

இறைவனின் திருவடிகளை மனதில் கொண்டு, அவன் அருளை உணர்ந்தவர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்தி மாயையிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால், இறைவனை எண்ணி வணங்காதவர்களோ, இந்த பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிறப்பதன் வேதனை அனுபவிக்க நேரிடும்.

எளிய பொருள்:

இறைவனின் திருவடிகளை மனதில் கொண்டு வாழ்பவர்களுக்கு, பிறவியின் பெருங்கடலை கடந்து விடுவது சுலபம். மற்றவர்கள் அந்த மாயைச் சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றனர்.


ஒளியாகி அண்டமெல்லாம் நிறைந்திருப்பவன் திருவடி வணங்குவோம்!


எங்கும் நிறைந்திருப்பவன்


சிவாய நம இறைவனின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றித் துதிக்கும் பொழுது நம் அகத்தில் இருக்கும் இறைவன் உளம் மகிழ்கிறான். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைப் போற்றி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஒளியாகி எங்கும் நிறைந்திருப்பவனைப் போற்றுவோம்.





  1. ஆதி பகவன் தாள் போற்றி - முதன்மையானவன் திருவடிகள் போற்றி
  2. வாலறிவன் நற்றாள் போற்றி - பரிசுத்தமானவன் திருவடிகள் போற்றி
  3. மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி - எங்கும் நிறைந்திருந்தாலும் தாமரை மலர் போல் உயர்ந்து தனித்திருப்பவன் தாள் போற்றி
  4. வேண்டுதல்வேண் டாமை இலானடி - விருப்பு வெறுப்பு அற்றவன் திருவடி போற்றி
  5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் மாட்டு (திருவடி) போற்றி - பிறப்பு இறப்பு நன்மை தீமை இல்லாதவன் திருவடி போற்றி
  6. ஐந்தவித்தான் தாள் போற்றி - நம் ஐம்புலன்களின் அர்ப்பணிப்பை ஏற்று மாயையில் இருந்து விடுவிப்பவன் தாள் போற்றி
  7. தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி - இறைவனுக்கு சமமான, ஒப்புமையாக, இணையாக இல்லாதவன் தாள் போற்றி
  8. அறவாழி அந்தணன் தாள் போற்றி - எல்லையற்ற கடலைப் போன்ற அருளை பொழிபவன் தாள் போற்றி
  9. எண்குணத்தான் தாள் போற்றி - இரு வினைகளையும் அழித்து பரிசுத்தமாக்குபவன் தாள் போற்றி (எண் என்றால் அழிப்பவன் என்றும் தமிழ் அகராதியில் பொருள் உள்ளது. வண்ணான் வெளுத்த உருப்படி என்றும் பொருள் உள்ளது)
  10. இறைவனடி போற்றி -  பிறவிப் பெருங்கடலை கடக்க   உதவும் எந்த உருவில் வேண்டுமானாலும் குருவாக வரும்  ஞான ஆசிரியர் தாள் போற்றி (இறைவன் என்பதற்கு குரு என்று ஒரு பொருள் தமிழ் அகராதியில் இருக்கிறது)

திருவள்ளுவர் பெருமான் திருவடிகளை வணங்கி மேலே உள்ள போற்றிகளை தினமும் சொல்லி இறைவனை வணங்குவோம்! பிறவித்துயர் நீங்கி நிலைத்த ஆனந்தம் பெறுவோம்! 

சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

Comments

Popular posts from this blog

சாய் அருளால் அபிராமி அந்தாதி விளக்கம்!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் பாடல் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!

*அற்புதமான இறைய அனுபவப் பதிவு* கந்தர் அலங்காரப் பாடல்!