இறைவன் அருள் இருந்தால் இந்தப் பதிவை படித்து உள்வாங்க முடியும்! இறையருளால் உண்மைப் பொருள்!
- Get link
- X
- Other Apps
குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
சொற்கள் பிரித்து விளக்கம்:
அன்றறிவாம் - சில செயல்களின் பயனை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது
- நாம் செய்யும் தர்மச் செயல்களுக்கு உடனடியாக அதன் முழு பயனை அறிய முடியாது.
என் - எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல்
- எதை செய்கிறோமோ அதை என்பதாகப் பொருள்படும்.
ஆது - இரக்கத்துடன், பரிவுடன்
- இதன் பொருள், தர்மத்தை இரக்கமும் பரிவும் கொண்ட மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்பதாகும்.
அறம் - தர்மம்
- அறம் என்பது பிரதிபலன் பாராது செய்யும் தர்மம்.
செய்க - செய்தல்
- அறத்தின் (பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இல்லாமல், பார்க்க குறள் 35) அடிப்படையில் செயல்களைச் செய்தல்.
மற்றது - இவ்வாறு யோசிக்காமல் செய்யப்பட்ட தர்மங்கள் (மற்றவை அல்ல)
- எண்ணிப் பின்பு பயன் பார்த்து செய்யும் தர்மம் அல்லாமல், உண்மையான அர்த்தமுள்ள தர்மச் செயலைக் குறிக்கிறது.
பொன்றுங்கால் - உடலை விட்டு ஆன்மா நீங்கும் பொழுது
- இறப்பின் தருணத்தில், இந்த உடலை விட்டுப் பிரியும் தருணத்தில்.
பொன்றாத் துணை - அழியாமல் கூட வரும்
- மரணம் வந்தாலும் அழியாத ஆதரவாகப் பின்வரும் துணை.
முழு விளக்கம்:
திருவள்ளுவர் இந்தக் குறளில் கூறுவது என்னவென்றால், நாம் செய்யும் தர்ம செயல்களின் பயனை உடனடியாக அறிய முடியாது. ஒருவரின் நலனை நினைத்து, அவர்கள் மேல் இரக்கமும் பரிவும் கொண்டு எந்த தர்மம் செய்கிறோமோ அது உண்மையான அறமாகும்.
இவ்வாறு பொருளோ அல்லது பலனோ பற்றி சிந்திக்காமல், ஆழமான கருணையுடனும் நேர்மையுடனும் செய்த அறச் செயல்களே நாம் இறந்தபின்னரும் நம் ஆன்மாவிற்கு அழியாத துணையாக நிற்கும். மரணம் உடலை சாம்பலாக்கினாலும், நாம் செய்த நற்செயல்களே நம் ஆன்மாவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதையே இந்தக் குறள் உணர்த்துகிறது.
எளிய பொருள்:
நாம் ஒருவரின் நலனுக்காக எதையும் எதிர்பாராமல் இரக்கத்துடன் செய்யும் உண்மையான தர்ம செயல்கள் மட்டுமே நமக்குத் தொடர்ந்து அழியாத ஆதரவாக இருக்கும், அதே சமயம் உடனடியாக அதன் பயனை நம்மால் அறிய முடியாது.
சிவாய நம
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு திருவாசகம் பாராயணம் கம்யூனிட்டி குழுவில் 02/11/ 2024 அன்று இறைவன் அருளால் பதிவிடப்பட்ட பதிவு. நேற்றைய தினம் பதிவு செய்திருந்த பதிவை உறுதி செய்யும் வண்ணம், 36 ஆவது திருக்குறளை இறைவன் காண்பித்து அதற்கு நாம் உணரும் வண்ணம் பொருளையும் கொடுத்திருக்கிறார்.
இறைவன் காண்பித்த இந்த வழிகாட்டுதலை ஆத்மார்த்தமாக புரிந்தவர்கள் ஆன்மா, இறைவன் காட்டும் வழிமுறைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெறும்.
சிவாய நம
தானம் ஏன் செய்ய வேண்டும்?
இறைவன் உணர்த்திய பதிவு - சிவாய நம
ஒரு கற்பனையான எடுத்துக்காட்டுக்கு நாம் நம்முடைய வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறி விட்டோம் என்று நினைத்துக் கொள்வோம். வீட்டை விட்டு வெளியேறிய பின் எங்கு போவது? தங்குவது? எங்கு சாப்பிடுவது? எங்கு தூங்குவது? இப்படி அனைத்தையும் யோசித்துப் பாருங்கள். வீடு என்ற ஒரு பாதுகாப்பு எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர்வோம்.
ஆனால் நாம் இறந்த பின்பு நம்முடைய உடலை விட்டு ஆன்மா வெளியேறியே ஆக வேண்டும். அப்பொழுது இந்த ஆன்மா எங்கு செல்லும்? ஆன்மாவிற்கு பசி தாகம் உண்டு. அதற்கு எப்படி சாப்பாடு கிடைக்கும்? எங்கு இளைப்பாறும்? இதற்காகத்தான் நாம் பிறருக்கு தானம் செய்தல், வார்த்தைகளாலும் செயலாலும் உதவுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த தானங்கள், பிறருக்கு சொன்ன ஆறுதல் வார்த்தைகள், பிறருக்கு உழைப்பால் உதவிய உதவிகள் அனைத்தும் நம்முடைய ஆன்மாவின் பயணத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் செய்யும். திரும்பவும் நாம் உடல் எடுத்து பிறக்கும் வரை நாம் செய்த உதவிகள் தானங்கள் மட்டுமே நமக்கு உதவும்.
இவ்வாறு தானம் செய்யாத முன்னோர்கள் கஷ்டப்படும் பொழுது பூமியில் உள்ள அவர்கள் சந்ததிகள் பிறருக்கு தானம் தர்மங்கள் செய்து அந்த ஆன்மாக்களுக்கு உதவ வேண்டும். நாம் வங்கியில் வைத்திருக்கும் பணம் இந்த பூமியில் இருக்கும் வரை மட்டும்தான் உதவி செய்யும். ஆனால் நாம் செய்த தான தர்மங்கள் உதவிகள், இந்த பூமியை விட்டு நாம் நீங்கும் பொழுதும் நம்முடைய ஆன்மாவிற்கு உதவி செய்கிறது.
அது மட்டுமன்றி இந்த பூமியில் நாம் வாழும் பொழுது திடீரென மிகப் பெரிய ஒரு ஆபத்து நம்முடைய கர்மாவினால் நமக்கு வர இருக்கிறது என்றால் அதை குறைக்கும் வகையில் நம்முடைய தான தர்மங்கள் உதவி செய்யும்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் அப்பா தன்னுடைய மகளுக்கு திருமணத்திற்கு என்று தனியாக பணத்தை சேமித்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். திடீரென அவருக்கு அல்லது அவருடைய மனைவிக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகும்பொழுது அதற்கு பணம் தேவை என்றால் இது திருமணத்திற்காக சேர்த்து வைத்த தொகை இதை எடுக்கக் கூடாது என்று இருக்க முடியுமா? முதலில் உடல்நிலை சரியில்லாதவருக்கு உபயோகப்படுத்தப்பட்டு விட்டு திரும்பவும் பணத்தை சேமிக்க ஆரம்பிப்பார்.
அதுபோல இந்த பிறவியில் யாரேனும் உதவி கேட்கும் பொழுது சட்டென எதையும் யோசிக்காமல் உதவி செய்யும் பொழுது அந்த உதவி நமக்கு இந்த பிறவியில் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களை குறைக்கும் அற்புதமான ஒரு கவசமாக அமையும்.
அதற்காகத்தான் இப் பிறவியில் நாம் தொடர்ந்து எந்த பலனையும் எதிர்பார்க்காமல் ஆன்மாவிற்காகவும் இந்தப் பிறவி வாழ்க்கைக்காகவும் இயல்பாக தான தர்மங்களை, பிறருக்கான உதவிகளை செய்து கொண்டிருக்க வேண்டும்.
இத்துடன் மனம் ஒன்றி இறைவனை எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வது, அவருடைய நாமத்தை சொல்வது, அவருடைய பெருமைகளை மற்றவருக்கு எடுத்துச் சொல்வது, முடிந்த பாராயணங்களை ஆத்மார்த்தமாக செய்வது இவை அனைத்தும் இப்பிறவி வாழ்க்கைக்கும் நம்முடைய ஆன்மாவின் பயணத்திற்கும் உதவும்.
இதனை உணர்த்திய இறைவன் திருவடியை இணைந்து வணங்குவோம்! சிவாய நம.
தற்கொலையினால் ஆன்மாவிற்கு ஏற்படும் துயரம்!
சிவாய நம
இறைவன் உணர்த்திய பதிவில் தற்கொலை குறித்து எழுத மறந்ததினால் இந்தப் பதிவு. முந்தைய பதிவில் சொன்னது போல் நாம் திடீரென கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டால், சாப்பிட, தூங்க, தங்க எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு என்று ஒன்று இருக்காது.
வீட்டை விட்டு வெளியேறும் போது பணம் இருந்தால் கூட பாதுகாப்பு என்பது கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதுபோல் வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்து கொள்பவர்கள் இந்த பாதுகாப்பை இழக்கிறார்கள்.
தற்கொலை செய்த உயிரின் ஆன்மா தங்குவதற்கு ஒரு உடல் இல்லாமல் மிகவும் தவித்து விடும். அந்த ஆன்மா செய்த தான தர்மத்தின் அடிப்படையில் மட்டும் தான் அந்த ஆன்மாவிற்கு பசி தாகம் போன்றவை தீர்வதற்கு வாய்ப்பு உண்டு.
இயற்கையால் நேரவேண்டிய ஒரு விஷயத்தை தானே செய்து கொள்வதால் அந்த ஆன்மா பலவித துயரங்களை அனுபவிக்கும். அதற்காகத்தான் இறைவன் எடுத்துக்காட்டாக வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு செல்லும் ஒரு விஷயத்தை உவமையாக நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றவர்கள் பெரும்பாலானோர் மிகப்பெரிய துயரத்தில் கஷ்டப்படுவது போல் தற்கொலை செய்து கொள்ளும் ஆன்மாக்கள் மிகப்பெரிய துயரங்களில் துன்பங்களில் கஷ்டப்படும். இதனை கண்டிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.
ஒரு தோல்வி என்று வந்துவிட்டால் அதை எதிர் நோக்க வேண்டும் என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். அதேபோல் மேலே சொன்ன உவமையை குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி தற்கொலை செய்வதினால் ஏற்படும் துயரங்களை எடுத்துச் செல்லும் பொழுது இளையவர்கள் மனதில் நன்கு பதிந்து தங்களுடைய வாழ்க்கையை தாங்களே முடித்துக் கொள்ள மாட்டார்கள்.
இதை உணர்த்தி எழுதி வைத்த இறைவன் திருவடியை பணிந்து வணங்குவோம். சிவாய நம
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
- Get link
- X
- Other Apps

அருமை அம்மா.
ReplyDelete